search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் பிரமுகர் கொலை"

    பொம்மிடி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பாப்பிரெட்டிபட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த கும்பாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி சாந்தி (வயது 47). விடுதலை சிறுத்தை கட்சியின் தருமபுரி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருந்தார்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாதையன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஸ்வினி (வயது 27) என்ற மகளும், நவீன்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். இதில் அஸ்வினிக்கு திருமணமாகி புதுப்பட்டியில் வசித்து வருகிறார்.

    கும்பாரஹள்ளியில் சாந்தி புதிய வீடு கட்டி வந்ததால், தனது மகனுடன் பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள ஒருவரது வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தார்.

    கடந்த மாதம் 10-ந் தேதி சாந்தி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மகன் நவீன்குமார் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. மர்ம நபர்கள் கொன்றுவிட்டு சென்றதாக தலையில் காயத்தை ஏற்படுத்தி அவர் நாடகமாடி வந்தார். பொம்மிடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சாந்தியின் வீட்டிற்கு வெளி ஆட்கள் அடிக்கடி வந்து சென்று உள்ளனர். அவருக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்து உள்ளது.

    இதை மகன் நவீன்குமார் கண்டித்து உள்ளார். அவரது தாயார் சாந்தி கேட்கவில்லை. இதனால் அவரை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து தாயாரை கொன்றதாக நாடகமாடிய நவீன்குமாரை நேற்று மாலை பொம்மிடி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கடந்த 20 நாட்களாக நவீன்குமார் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தலையில் அரிவாள் மனையால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதனால் அவருக்கு 2 இடங்களில் ஆபரேசன் நடத்தப்பட்டது. ஆபரேசன் முடிந்து உடல்நிலை தேறியதைத்தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    தாயை கொன்றது ஏன் என்பது குறித்து நவீன்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    என் தாயார் பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்து இருந்தார். பல பேர் அவரை அடிக்கடி வீட்டுக்கு வந்து சந்திப்பார்கள். இதை நான் கண்டித்தேன். அவர் கேட்கவில்லை. இதனால் எனக்கும், என் தாயாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்படும்.

    சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அரிவாள் மனையால் என் தாயார் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் தலையணையை என் தாய் முகத்திலும், நெஞ்சிலும் வைத்து அழுத்தி கொன்றுவிட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளதாக தெரிகிறது. 

    ×